Login

Lost your password?
Don't have an account? Sign Up

திருவாதிரைக்களி / Thiruvadhirai Kali /செய்வது சுலபம் .சாப்பிடத்தூண்டும் சுவை!( Sweet )

Contact us to Add Your Business

# Thiruvadhirai Kali # நைவேத்தியம் # களி
Ingredients : Raw rice 1/2 cup roasted , green gram dhal -1/4 cup roasted , Jaggery , cardamom Powder , cashews , kismis , Ghee , a pinch of salt

Click Here to Add Your Business

https://www.ramanathapuramdistrict.com

23 comments

  1. Sasi Kalaa CM Chandhra Mouleeswaran

    மிக்க நன்றி, திருமதி.மல்ல்லிகா. ஒருவேண்டுகோளை உங்களிடம் எங்கள் மகளிர் குழு சார்பில் வைக்க எண்ணி இருந்தோம்.
    ஆனால் அதை எதிர்பார்த்த மாதிரி நீங்களே இந்த மாதிரி நோன்பிற்காகத் தயாரிக்கும் உணவுகளின் பின் உள்ள பாரம்பரியச் செய்திகளையும் இணைத்துச் சொல்கிறீர்கள். எங்களைப் போன்ற இளம் வயதுக் குடும்பத் தலைவிகளுக்கு, மிகவும் அருமையான கிடைத்தற்கு அரிய உதவி ஆகும்!! கேட்டரிங் டெக்னாலஜியைக் கரைத்துக்குடித்த எனது தோழி சுகன்யாவுக்குச் சரிவரச் சமைக்கவே தெரியாது!!

    வேலைக்காக எங்கிருந்தோ வந்து இங்கு இருந்து தனித் தனிக் குடும்பங்களாக இருக்கிறோம். குடும்பத்துப் பெரியவர்கள் வழிகாட்டல் எதுவும் கிடைப்பது இல்லை. என்னவோ சமைக்கிறோம். தெரியாத போதோ முடியாத போதோ ஓட்டலே கதி! கணவரின் அலுவலகச் சம்பளம் பாதிக்கு மேல் ஓட்டல்காரருக்குப் போய் விடுகிறது.
    அலைச்சல் அதிகமுள்ள வேலைகளில் உள்ள கணவன்மாருக்கு எங்களால் ருசியாகவும் கலப்படம் இல்லாமலும் சமைத்துப் போடக் கூடத் தெரியவில்லை!
    மிகவும் வருத்தமாக உள்ளது; கல்லூரியில் இப்படி உங்களை மாதிரி கரிசனத்துடன் சொந்த முயற்சியில் செய்து காட்டிச் சொல்லிக் கொடுக்கவில்லையே என்று!

    எங்களுடன் மூத்தவர்கள் இப்போதெல்லாம் இருப்பது இல்லை. அன்றாட நடைமுறைப் பழக்க வழக்கங்களைக் கூட அடையாளம் காட்ட யாரும் இல்லை. எனக்கெல்லாம் இன்னும் எந்தக் கீரைவகையும் சரியாக அடையாளம் தெரியாது. காய்கறிக் கடைக்காரர் சொல்வதுதான் தெரியும். நமது தமிழக உணவுப் பொருட்களைக் கூட எங்களால் சரியாகத் தயாரித்து அவற்றை வரிசைப் படி முறையாகப் பரிமாறத் தெரியாது!! அதைவிட மோசம், அக்கா, எத்தனையோ பொருட்களை எப்படி வரிசையாகச்சாப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாது!

    சென்ற மாதம் ஒரு பெரியம்மா எங்களின் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு திருமதி. சசிகலா சந்திர மௌலீஸ்வரன் அவர்கள் மூலமாக உங்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களது வீட்டில் கம்ப்யூட்டர் வசதி எல்லாம் இருப்பதால் உங்களது
    யூட்யூப் அடிக்கடி எங்களுக்குப் பார்க்கக் கிடைக்கும்.
    ஆதலால் நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளோம். எங்கள் மகிழ்ச்சியை இப்படி எழுதிக் காட்டக் கூட ஒரு மூத்த சகோதரி (சசி) உதவி வேண்டி உள்ளது!

    நேற்று அவர்கள், கேரள சதயம் விருந்து உணவை உண்டுவிட்டு ஒரு வெளிநாட்டவர் பரம சந்தோஷத்துடன் பதிவு செய்த வீடியோவைக் காட்டினார்கள். இப்போதுதான் எங்களுக்கு நமது பாரம்பரிய மதிய உணவில் இத்தனை அடக்கப் பொருட்கள் உள்ளன என்பதும் அதை இந்த மாதிரித்தான் வரிசைப் படி முறையாகக் கலந்து சாப்பிட வேண்டும் என்பதே தெரியும்! முன்பு எங்களுக்கு அதை பரிமாறி இருந்தார்களானால், பிச்சைக்காரர்கள் மாதிரி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சாப்பிட்டிருப்போம்!!

    நீங்களெல்லாம் பெரிய மனத்துடன் பல கடமைகளுக்கும் சிரமங்களுக்கும் நடுவில் இப்படி உதவினால்தான் உண்டு. நீங்கள் சொல்லும் முறையும் புன்சிரிப்புடன் செய்து காட்டுவதும் மிகவும் ஆதரவாக உள்ளது. எங்கள் அம்மா அல்லது அக்கா அல்லது அண்ணி சொல்லித் தருவது போல உள்ளது. மிகவும் மிகவும் மிகவும் நன்றி அக்கா!

    வணக்கம்!

    **********************************************************************************************

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*