|
இராமநாதபுரம் மாவட்டம் [Ramanathapuram District], சுமார் 4123 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் ராம்நாடு எனப்படும் இராமநாதபுரம் ஆகும். இம்மாவட்டத்தின் வடகில் சிவகங்கை மாவட்டமும் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும் கிழக்கில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையும் தெற்க்கில் மன்னார் வளைகுடாவும் மேற்க்கில் தூத்துக்குடி மாவட்டமும் வடமேற்கில் விருதுநகர் மாவட்டமும் உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் [Ramanathapuram District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 11,87,604 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 73% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 13,37,560 பேர் உள்ளதாகவும், இதில் 6,76,574 ஆண்களும் 6,60,986 பெண்கள் உள்ளனர். இங்கு 81.5% பேர் படித்தவர்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் [Ramanathapuram District], 7 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.
* Kadaladi - கடலாடி * Kamuthi - கமுதி * Mudukulathur - முதுகுளத்தூர் * Paramakudi - பரமக்குடி * Ramanathapuram - இராமநாதபுரம் * Rameswaram - இராமேஸ்வரம் * Tiruvadanai - திருவாடானை
இராமநாதபுரம் மாவட்டத்தின் [Ramanathapuram District], முக்கியத் தீவுகள்
* அப்பா தீவு * ஆனைப் பாறைத் தீவு * உப்புத்தண்ணீர் தீவு * குருசடைத் தீவு * சிங்களத் தீவு * சுளித் தீவு * மணலித் தீவு * முயல் தீவு * முளித் தீவு * தலையாரித் தீவு: * வாளைத் தீவு * பிள்ளையார்முனைத் தீவு * பூவரசன்ஹள்ளித் தீவு * பூமறிச்சான் தீவு * நல்லதண்ணீர்த் தீவு
|
|
Read more...
|